தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
இது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் கால் ஆண்டு பரீட்சை முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இதனைத்த தொடர்ந்து ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று (14/10/2024) காலை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். இதனையடுத்து அணைத்து பள்ளிகளுக்கும் இந்த அட்டவணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அட்டவனைப்படி 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 3 முதல் 25 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரையம். இறுதியாக 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 28 தொடங்கி ஏப்ரல் 15 வரையிலும் தேர்வு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒவ்வொரு பரீட்சைக்கும் நன்றாக படிக்கும் வகையில் சரியான கால இடைவெளி விட்டு பரீட்சைகள் நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் இன்றில் இருந்தே பொதுத்தேர்விற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி படிக்குமாறு பள்ளிக்கல்விகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
பொதுத்தேர்வுக்கு முன்னதாக, பிப்ரவரி 7ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
03/03/2025 – மொழிப்பாடம்
06/03/2025 -ஆங்கிலம்
11/03/2025 – கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி
14/03/2025 – கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்
18/03/2025 – உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
21/03/2025 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
25/03/2025 – இயற்பியல், பொருளாதாரம்
11-ம் வகுப்பு தேர்வு அட்டவணை
11 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
05/03/2025 – மொழிப்பாடம்
10/03/2025 – ஆங்கிலம்
13/03/2025 – கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்
17/03/2025 – உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
20/03/2025 – இயற்பியல், பொருளாதாரம்
24/03/2025 – கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி
27/03/2025 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
10 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி பிப்ரவர் 28ம் தேதி வரை நடைபெறும்.தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28/03/2025 – தமிழ்
02/04/2025 – ஆங்கிலம்
07/04/2024 – கணிதம்
11/04/2024 – அறிவியல்
15/04/2024 – சமூக அறிவியல்