புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள வெட்டி வயல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் என்ற சிவா ( வயது 24 ) இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வெள்ளலூர் ரைஸ் மில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு பெண்கள் அவருக்கு விபச்சார அழைப்பு விடுத்தார்கள். இது குறித்து சிவா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வி ( வயது 47 ) மஞ்சு ( வயது 47) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..