நத்தத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சுற்று வட்டாரங்களிலும், கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிருஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது. இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில்  மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன்,  நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத், தலைவர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தயார் நிலையில்  வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பூமாலைகளால் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி ஓசையுடன் மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன், நத்தம்- கோவில்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய இந்த விநாயகர் சிலைகள்  ஊர்வலம் சாரல் மழையுடன் தர்பார் நகர், பஸ்நிலையம், மூன்றுலாந்தர், அவுட்டர் சாலை,  வழியாக அம்மன் குளத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு, , பூஜைகள், தீபாராதனைக்கு பின் னர், அம்மன் குளத்தில் போய் கரைக்கபட்டது. இதில் சுமார் 33-க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் தாசில்தார் ராமையா, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்க முனிசாமிஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர். நத்தம் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமானவர்கள் வந்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்..