டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை.!!

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது.

இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ? இதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏதேனும் வெளியாக வாய்ப்பு இருக்கின்றதா ? என்பதெல்லாம் பட்ஜெட் வெளியாகும் வரை, இதன் முக்கிய அம்சங்கள் அனைத்தும் ரகசியமாக காக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் வருமானம் என்பது ஏற்கனவே 2020 – 2022 ஆகிய வருடங்களிலே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அது சிறுகுறி தொழிலாளராக இருந்தாலும் சரி அல்லது விவசாய துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது மாத சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் சரி அனைவருக்குமே இதானால் ஒருவகையில் பாதிப்பு இருக்கிறது. ஆகவே அந்த பாதிப்பை நீக்கும் வகையிலே மக்களின் கையிலே வரிக்குப் பிறகு வருமானம் அதிகமாக இருக்க..

அவர்கள் கையில் பணம் போய் சேரும் வகையிலே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆகவே பெண்கள், முதியோர் ஆகியோருக்கு சலுகைகள் அளிக்கப்படுவது போலவே வருமான வரி சலுகைகள் சம்பளம் வாங்குவதற்கு கிடைக்க வேண்டும். தொழில்துறைக்கு கிடைக்கும் அதே மாதிரியான சலுகைகள் இவர்களுக்கும் வழங்க வேண்டும். அதேபோலவே முடியாது என்றாலும் கிட்டத்தட்ட, அதே பலனை அளிக்கக் கூடிய வகையில் அளிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதையெல்லாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பார்க்க முடியும் என பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வருடம் 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஆகவே பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு ஆகியவற்றை சமாளிக்கும் வகையிலே வரிசலுகைகள் மாத சம்பளம் வாங்குவதற்கு கூட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதே போல வரக்கூடிய காலங்களில் பெட்ரோல்/ டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயராமல் இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.