வித விதமான பாரம்பரிய உடைகளில் அசத்தும் பிரதமர் மோடி… சில சுவாரஸ்ய தகவல் இதோ…

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் Xi Jinping மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பு சென்னை அருகேயுள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

அப்போது, பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டையை அணிந்திருந்தார்.

2022 பிப்ரவரியில் புது தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஆப்கானிஸ்தான் சீக்கிய-இந்து தூதுக்குழுவினரால் பரிசாக வழங்கப்பட்ட ஆப்கானிய பாரம்பரிய உடை மற்றும் தலைக்கவசம் உடன் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி டிசம்பர் 2022 இல் தனது ஜம்மு காஷ்மீர் பயணத்தின் அணிந்திருந்த உடை. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

2019 நவம்பரில் பஞ்சாபில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பிரதமர் மோடி.

மே 2019 இல் கேதார்நாத்தில் உத்தரகாண்டின் பாரம்பரிய உடையை அணிந்த பிரதமர் மோடி.

பிப்ரவரி 2019 இல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்

பிரதமர் மோடி பிப்ரவரி 2018 இல் தனது அருணாச்சல பிரதேச பயணத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார்

2014ல் நாகாலாந்தில் நடந்த ஹார்ன்பில் திருவிழாவில் மோடி.