பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு பலமுறை திட்டமிட்டும் அவரால் சந்திக்க முடியாமல் போனது. சமீபத்தில் கூட பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்ற இபிஎஸ் உள்துறை அமைச்சரை மற்றும் சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க திட்டமிருப்பது தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்படுகிறது. இந்த சந்திப்பின் போது வருகிற தேர்தலில் கூட்டணி உட்பட சில விஷயங்களை பேச இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி மற்றும் ஓபிஎஸ் சந்திப்பின் தகவலால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
Leave a Reply