சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைன் நாட்டிற்கு கிடைத்த வெற்றி-அதிபர் ஜெலன்ஸ்கி மகிழ்ச்சி.!!

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீடிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளோம்.

சர்வதேச நீதிமன்ற உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.