கோவையில் வண்ணமயமான முதல் நாள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்.!!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் தங்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர். ஹோலி பண்டிகை என்பது வடமாநில மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்த வகையில் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த வடமாநில பெண்கள், ஹோலி பண்டிகையின் முதல் நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகையானது, தற்போது தென் மாநிலங்களில் பரவலாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.