பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி தான் சாட்சி… ஆதாரம் இருந்தா காட்டுங்க சார் மீது நடவடிக்கை எடுப்போம் – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

மிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்று கூறினார். இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்த பின்னரும் எதிர்கட்சிகள் குறை கூறுவது அரசியலாதாயத்திற்கு மட்டும்தான். யார் அந்த சார் என்று கேட்கிறார்கள். மேலும் அந்த சார் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.

அதன்பிறகு 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றம் மூலமாக குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். ஒருவேளை எதிர்க்கட்சியினரிடம் யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அதனை கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு வீண் விளம்பரத்திற்காக மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான் என்று கூறினார்.

முன்னதாக ஆர் பி உதயகுமார் ஞானசேகரன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது அவரை சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டது ஏன் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் ஒரு குற்றவாளி எப்படி அனுமதிக்கப்பட்டார் எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாமல் இருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பிய நிலையில் சபாநாயகர் அப்பாவு தலையிட்டு இந்த விவகாரத்தில் முதல்வரை குறை சொல்லுவது நியாயம் கிடையாது எனவும் ஒருவேளை தவறு இருந்தால் சட்டசபையில் இன்று விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்க மாட்டாது எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..