கோவையில் இந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 261பேர் பலி…

உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் 2 ஆதாய கொலைகள் நடந்தது .இந்த ஆண்டில் ஆதாய கொலை எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு 187 வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இந்த ஆண்டு 78 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 35 கொலைகள்நடந்தன. இந்த ஆண்டில் 22 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு 58 கொலை முயற்சி சம்பவங்களும்,இந்த ஆண்டில் 32 கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 1,132 திருட்டு சம்பவங்களும் இந்த ஆண்டில் 1,134 திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளது. அதோடு 16 பேரக் சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுமேலும் அதிக அளவில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .குறிப்பாக கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் ,ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் ரோந்துபணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரவுடிகள் உட்பட 92 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த ஆண்டில் 83 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு , 1,085 சாலை விபத்துகளில் 272 பேர் உயிரிழந்தனர் .939 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டில் 1.008 சாலை விபத்துகளில் 261 பேர் உயிரிழந்தனர். 865 பேர் காயமடைந்தனர். விபத்து பலி எண்ணிக்கை குறைந்துள்ளது இது தவிர 284 போதை பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 485 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் 180 கிலோ கஞ்சா 4,743 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஅவர்களது 16 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர்கூறினார். பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர்கள் சண்முகம், சந்தீஸ், சுஹாசினி, ராஜராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.