கோவை ஓட்டல் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை காந்திபுரம் 3 -வது வீதியை ( விரிவாக்கம்) சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செந்தில்குமார் ( வயது 30) இவர் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்றும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார்.இதனால் இவரது மனைவி பாண்டி செல்வி (வயது 27) கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் காந்திபுரம் 6 -வது வீதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டுக்கு வந்த செந்தில்குமார் வீட்டில் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி பாண்டி செல்வி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.