ஓட ஓட வெட்டி படுகொலை: குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர் – கோவையில் பரபரப்பு
கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர்.
கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி. கடந்த 2021 – ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்பு இருந்த கோகுல் உள்பட 5 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோகுல் ஜாமீனில் வெளிய வந்தார். இவ்வழக்கு கோவை 3 – வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது வழக்கறிஞருடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம கும்பல் கோகுல் மற்றும் மனோஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ச்சியை ஏற்படுத்திய
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று மாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் ஜோஷ்வா, கவுதம் ஆகிய 2 பேர் செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய கவுதம், ஜோஷ்வா ஆகியோர் போலீசார் வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவுதம், ஜோஷ்வா ஆகியோர் கால்களில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்
மேலும்குற்றவாளிகளை அழைத்து வரும் போது காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
காயமடைந்த காவலர்.
Leave a Reply