மேகதாது எங்களது உரிமை.. அணை கட்டுவது உறுதி- துரோகம் செய்யும் எண்ணம் இல்லை.. டி.கே. சிவகுமார் திட்டவட்டம்..!

மேகதாது அணை திட்டத்தை தொடங்குவதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்..

கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.

பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார். அதில் கடந்த ஆண்டு மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால், அதனை நிறைவேற்ற எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தில் நீர்ப்பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று, நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்கவும், மேகதாது மற்றும் மகதாயி அணைத் திட்டத்தை செயல்படுத்தவும தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவில் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்தார்.