இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது…

மாவட்டத் தலைவர் k.தசரதன் தலைமை வகித்தார் .மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் s.சதீஸ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த பத்தாம் தேதி சுகுணாபுரம் செக்போஸ்டிற்கு அருகில் அப்துல் காதர் என்பவர் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை வந்தார். அவரை செக் போஸ்ட்க்கு வந்த காவல்துறை விசாரித்த பொழுது அவரது இரு மகன்கள் மற்றும் ஒருவர் காவல்துறை செக் போஸ்ட் க்கு வந்து ரகலையில் ஈடுபட்டனர். காவலர் வடிவேலு என்பவரை தள்ளிவிட்டனர். அங்கிருந்த மைக் தண்ணீர் குடுவை ஆகியவற்றை உடைத்தனர்.
இந்த சம்பவத்தை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 1996 ஆம் ஆண்டு இதே போல தான் கோவை கோட்டைமேடு செக் போஸ்ட் தகர்க்கப்பட்டது என்பதையும் காவல்துறை நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் மீது சாதாரண வழக்கை காவல்துறை பதிவு செய்துள்ளதையும் இந்து முன்னணி கண்டிக்கிறது . மேலும் கோவை மத்திய சிறையில் ஆரிஃப் என்பவன் ஐ எஸ் பயங்கரவாத கொடியை கருப்பு மையினால் எழுதியுள்ளது சோதனையின் போது கண்டெடுக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த அவன் சிறைத்துறை அதிகாரிகளையே மிரட்டுகிறான். ஜெயிலையே தகர்ப்போம் என சவால் விடுகிறான் .
சிறைக்குள் நடைபெறும் இந்த அசம்பாவித சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி பேரி யக்கம் கேட்டுக் கொள்கிறது.

கடந்த ஒரு மாத காலமாக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் பக்தர்களுக்காக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் இருக்கிறது கேரளா அரசாங்கம்.
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லை. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கேரளா அரசாங்கம் உடனடியாக சபரிமலை பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என கோருகிறோம் என பேசினார். கூட்டத்தில் கோட்டச்செயலாளர் பாபா ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட துணை தலைவர் சோமசுந்தரம் மாவட்டச் செயலாளர்கள் K. ஆறுச்சாமி k. மகேஸ்வரன் M.ஆனந்த் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.