தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்தில் சீட்டாட்டம் : 12 தொழிலதிபர்கள் கைது – 6 கார் ,8 பைக் பறிமுதல்..!

தொண்டாமுத்தூர் அருகே தோட்டத்தில் சீட்டாட்டம்: 12 தொழிலதிபர்கள் கைது – 6 கார் , 8 பைக் பறிமுதல்..!  கோவை தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள கருப்புராயன் கோவில் வீதியில் சங்கர்என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளை யாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜா அங்கு திடீர்சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள்லோகநாதன், விக்னேஷ், படையப்பா, கண்ணா மாறன், குணசேகரன், சதீஷ் பாபு, சந்திரசேகர், மணிகண்டன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இவர்களிடம் இருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ 1லட்சத்து 10 ஆயிரம் பணமும், 2 செல்போன்,6 கார்கள். 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது .தோட்டத்து உரிமையாளர் சங்கர் பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.