கோவையில் போக்குவரத்து மாற்றத்தால் விபத்து பலி வெகுவாக குறைவு – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்..!

கோவை நகரில் தற்போது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை குறித்து ” பவர் பாயிண்ட் ” நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-கோவை நகரில் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாலி ரோடு , வடகோவைசிந்தாமணி ப்ரூக்பீல்டு, சுங்கம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் சங்கனூர் ஜங்ஷன் ஆகிய இடங்களில் சிக்னலகளுக்கு பதிலாக ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டு சீரான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர அவினாசி ரோடு பகுதியில் ஜே. எம். பேக்கரி, எல்ஐசி சிக்னல்’ லட்சுமி மில்ஸ் சிக்னல், எஸ். ஓ .பங்க் ,பி எஸ் ஜி சிக்னல், பயோனியர் சிக்னல்,பன் மால் ஹோப் கல்லூரி,மருத்துவக் கல்லூரி ,விமான நிலையம் பகுதிகளில் சிக்னலுக்கு பதிலாக “யூ டேர்ன்” அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது .இதில் உள்ள சில குறைகளும் நீக்கப்பட்டுள்ளன திருச்சி ரோடு சிங்காநல்லூர் பஸ் நிலைய சிக்னல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யூ டேர்ன் வசதி மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுமாக குறைந்துள்ளது. யூ டேர்ன் பகுதிகளில் வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்களே பச்சை நிற விளக்கு பொத்தானை அமுக்கி சாலையை கடக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது சுங்கம் பகுதியிலும் விரைவில் செய்யப்படவுள்ளது. மேலும் சிக்னல் பகுதி எடுக்கப்பட்டு யூ டேர்ன் வசதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரிகள் எளிதில் கடக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் அதிவேகமாக வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பாக அவினாசி ரோடு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி செல்வதை தடுக்க “ரேடோர் கேமரா ” பொருத்தப்பட்டுள்ளது. 40 கிலோமீட்டர் வேகமாக செல்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கோவை நகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகளால் விபத்து உயிரிழப்பு வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த 20 22 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நகரில் நடந்த விபத்தில் 139 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 119 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட உயிரிழப்பு20 குறைந்துள்ளது. உயிரிழப்பு இல்லாத விபத்துக்கள் கோவையில் கடந்த ஆண்டு 413 நடந்தது. இந்த ஆண்டு 369 மட்டும் நடந்துள்ளது விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினா.ர்.இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் கலந்து கொண்டார்.