நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு..!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார்.

அதன்படி ஜனவரி 31ல் துவங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 2 பகுதிகளாக 27 அமர்வுகள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 9 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சராக இருப்பவர் இதனை தாக்கல் செய்வார். இதற்கு முன்பு ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதனை கேன்சல் செய்து ஒரே பட்ஜெட் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

அதன்படி நாடாளுமன்றததில் 2023-2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக தயாரித்து வருகின்றன. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மத்திய பட்ஜெட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந் அறிவிப்பை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று வெளியிட்டார். அதன்படி ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் இந்த கூட்டத்தொடர் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் கூட்டதொடர் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலான 66 நாட்களில் 2 பகுதிகளாக 27 அமர்வுகளில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 14 முதல் மார்ச் 12ம் தேதி வரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும். அதன்பிறகு நடக்கும் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, மிசோராம் ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களுடன் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த மாநிலங்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் பணவீக்கம், நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளிட்டவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனை சமாளிக்கவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.