கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் சென்னை கோபாலபுரம் வரை பாதயாத்திரை போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு..!!

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் சென்னை கோபாலபுரம் வரை பாதயாத்திரை போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன்னர் இந்த உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஜனவரி 1 முதல் கன்னியாகுமரி விவேகானந்தர் பார்வையில் தொடங்கி கோபாலபுரம் இல்லம் வரை 365 நாட்கள் பாதயாத்திரை போராடம் நடத்துவோம் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.