225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்..!

தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கமளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது ; மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அண்ணா பல்லலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வுசெய்த அண்ணாமலை பல்கலைக்கழகம் 225 கல்லூரிகளில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள் இல்லாததை கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

இதனிடையே, B.E., B.Tech., படிப்புகளில் சேர இதுவரை 1,43,313 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 96,759 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.