இனி க்யூர் கோடு ஸ்கேன் உள்ளிட்ட 7 வழிகளில் சொத்து வரி செலுத்தலாம் – முழு விவரம் இதோ.!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் இனி க்யூர் கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக க்யூர் கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியுடன் பெடரல் பேங்க் இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரியினை செலுத்தி ரசீதுகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரி செலுத்தும் நடைமுறை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது.