அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், வெறும் 2,800 ரூபாய்க்கு வாங்கிய பழமையான ஓவியத்தை ஏலத்தில் விற்று சுமார் 13 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் பார்த்துள்ள சம்பவம் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது . கெர்ட்ரூட் அபெர்கிரோம்பி என்ற பிரபல ஓவியர், தான் பெற்றுக்கொண்ட மருத்துவச் சிகிச்சைக்காகக் கட்டணமாக இந்த ஓவியத்தை மருத்துவர் ஒருவரிடம் வழங்கியுள்ளார் . பல ஆண்டுகளாக எவ்வித மதிப்புமின்றிப் புறக்கணிக்கப்பட்டிருந்த இந்த ஓவியம், தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய விலைக்கு ஏலம் போயுள்ளது .
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாகக் கேட்பாரற்று முடங்கிக் கிடந்த இந்த பழைய ஓவியத்தை, தற்போதைய உரிமையாளர் மிகக் குறைந்த விலைக்கு விலைக்கு வாங்கியுள்ளார். அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் அதன் உண்மையான கலை மதிப்பை உணர்ந்து அதனை ஏலத்திற்கு விட்டபோது, எதிர்பார்த்ததை விடக் பல மடங்கு அதிக விலை கிடைத்துள்ளது. வெறும் 2,800 ரூபாய்க்குப் பெறப்பட்ட ஒரு பொருள், இன்று கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபோயிருப்பது கலை உலகினரையும் மக்களையும் ஒருசேர ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
இது போன்ற பழைய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள் எங்கு இருந்தாலும் அவற்றின் உண்மையான மதிப்பைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வம் தற்போது பலரிடமும் அதிகரித்துள்ளது. சாதாரண மனிதர் ஒருவரின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற்றி, அவரைப் பெரும் கோடீஸ்வரனாக்கியுள்ள இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாக பரவி வருகிறது. அதிர்ஷ்டம் எப்போது யாரிடம் எப்படி வந்து சேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாகப் பேசப்பட்டு வருகிறது.








