எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி கவலை இல்லை… நாராயணன் திருப்பதி பேட்டி..!

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பாக இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

கட்சி தலைமை ஆனது ஓரிரு நாட்களில் இறுதி முடிவை அறிவிக்கும் என கூறினார். பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் இறுதியாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. பெரும்பாலான நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதேநேரம், இடைதேர்தலில் அதிமுகவே போட்டியிடும் என, ஏற்கனவே பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை அறிவித்துள்ளதால், இரட்டை இலை சின்னத்தை வைத்திருக்கும் அதிமுகவின் தரப்புக்கு ஆதரவளிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் இறுதி முடிவு எட்டப்படாததால், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் பாஜகவின் நிலைப்படு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என, நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இடைதேர்தலுக்கான பணிக்குழுவை முதற்கட்சியாக அறிவித்த பாஜகவிடம், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருதரப்பும் ஆதரவு கோரியுள்ளது. இதில் யாருக்கு ஆதரவு என பாஜக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.