ஒரு தலை காதலால் வடமாநில தொழிலாளி தற்கொலை..

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சவுரவ் குமார் ரிஷி தேவ் ( வயது 18 )இவர் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . அங்குள்ள தொழிலாளர் தங்கும் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால் அந்தப் பெண் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சவுரவ் குமார்ரிஷி தேவ் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.