கோவை ரயிலில் செல்போன் திருடும் வடமாநில கும்பல் சிக்கியது.!!

கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் ரயில்கள் மற்றும் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இது சம்பந்தமாக ரயில்வே காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்தது. இதன் பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அன்பு, சென்னை இரயில்வே காவல் மாவட்டம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மேற்பார்வையில் கோவை ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு தனிப்படையும் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டு செல்போன் திருடும் கும்பலை   ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ் சாகு (வயது 32) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நஜ்மல் (வயது 23) ஹிப் ஜூர் ரகுமான் (வயது 19) மேற்கு வங்காளம் ஈஸ்பர் அலி ( வயது 48) ஆகிய 4 பேர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.