கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு, நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்றும், அதே சமயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உட்பட்டது தான் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாநகராட்சி சேர்ந்த வாக்காளர் ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கோவை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில், தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு பணம் அளித்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் கொடுத்துள்ள பணம் லஞ்சமாக உள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை என்பது முறையாக நடத்தப்பட வேண்டும். இந்த பணப் பட்டுவாடா குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,

Leave a Reply