அ.தி.மு.க மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கைது.. அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சி.!!

திமுக நிர்வாகியை தாக்கியதாக பெறப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. பல இடங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தாலும், சில இடங்களில் சர்ச்சை சம்பவமும் நடைபெற்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள ராயபுரம் 49 ஆவது வார்டில், திமுக ஆதரவாளர் கள்ளஓட்டு பதிவு செய்ய முயற்சித்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், அவரின் ஆதரவாளர்கள் 40 பேர் திமுக ஆதரவாளரை தாக்கி, அரைநிர்வாணத்துடன் சட்டையை அகற்றி நிற்க வைத்தனர். ஊர்வலமும் அழைத்து சென்றனர்.

இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, 8 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.