ரயில் நிலையத்தை வரும் 30-ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம்…

டெல்லி:ஜனவரி 22-ம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். இத்தகவலை அயோத்தி நகர ஆணையர் கௌரவ் தயாள் தெரிவித்துள்ளார்.இந்த பயணத்தின் போது, ராமர் கோவில் திறப்பு விழா ஏற்பாடுகளை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார் .ராமர் கோவில் நடை திறக்கப்பட்டதும், பக்தர்களின் வசதிக்காக முதல் 100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.