கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. “நோயுற்ற, அறிகுறி உள்ள நோயாளிகளை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின், இதர பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்”. “மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பி பி இ கிட் அணிவதுடன் , முக கவசம், கையுறை ஆகியவற்றை அணிவதும் அவசியம்”. “மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்”. “நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்..
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி… தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
