தேசிய மாணவர் படையினர் போதை பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி.!!

போதை பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தேசிய மாணவர் படையினர் பேரணி.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிருஷ்ணா, , ராமகிருஷ்ணா, நேரு, சி.எம்.எஸ், ஸ்ரீராமு, வானவராயர் அக்ரி, பி.எஸ்.ஜி, கே.பி.ஆர். இந்துஸ்தான், போன்ற கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200 பேர் போதை பொருட்கள் தடுப்பு, கொரோனா விழ்ப்புணர்விற்காக பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசங்கங்களையும் வழங்கினர்.

சமீப நாட்களாக தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு பேரணிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.