- கோவையில் தேசியகொடி அவமதிப்பு
நாட்டின் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோவை சுந்திராபுரம், மாச்சம்பாளையம் 94 வது வார்டில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியகொடியின் கீழ் யேசுவே இந்தியாவை ஆசீர் வதிப்பீர் என்ற வாசகத்துடன் கொடியேற்றி உள்ளார்கள்.
மேலும் 13 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி மாலை வரை மட்டுமே தேசிய கொடியை வீடுகளின் முன் கட்ட வேண்டும் என்று அரசு உத்திரவு பிறப்பித்து இருந்தது.
தற்பொழுது இந்த நிமிடம் வரை தேசிய கொடியை கழட்டாமல் யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும் என்ற வாசகத்துடன் தேசிய கொடி பறந்து வருகிறது.
தற்பொழுது சம்பவ இடத்தில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply