இசை பொக்கிஷம் இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம் .பி பதவி: முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து..!!

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் வென்ற இசைஞானி இளையராஜா  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக சிறப்புற செயல்பட வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசிய போது பல அரசியல்வாதிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.