இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம் .பி பதவி: பிரதமர் மோடி வாழ்த்து..!!

இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி இதுகுறித்து தனது டுவிட்டரில் இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை என்றும் அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்

எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல சாதனைகளை செய்து இருக்கிறார் என்றும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்

இசைஞானி இளையராஜா மட்டுமின்றி விளையாட்டு வீராங்கனை பிடி உஷா உள்பட ஒரு சிலருக்கு நியமன எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது