பல்லாவரத்தில் லஞ்சம் வாங்கிய நகர் அமைப்பு அலுவலர் கைது..!

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி யில் அலுவலகத்தில் உள்ளே நகர அமைப்பு அலுவலகம் அமோகமாக பொதுமக்கள் உதவியுடன் மஞ்சள் பையில் 500 ரூபாய் நோட்டுக்களுடன் அமோகமாக செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் பல்லாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நகர அமைப்பு அலுவலர் நாகராஜ் என்பவன் பிளான் அப்ரூவலுக்காக வந்த ஒரு நபரிடம் எடு எடு பணத்தை அப்போதுதான் பிளான் அப்ரூவல் கிடைக்கும் என பிச்சைக்காரனைப் போல் விரட்டினார். அருகில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் மாறுவேடத்தில் நாகராஜிடம் சென்று என்ன சார் பிளான் அப்ரூவலுக்காக நடையாக நடக்கிறாரே தயவுசெய்து பிளான் அப்ரூவல் போட்டு விடுங்களேன் என கெ ஞ்சினர். ஆவேசமான நகர அமைப்பு அலுவலர் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் முடிந்தால் நீங்கள் கொடுங்களேன் என நாகராஜ் கிண்டலாக பேசினார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண் அசைக்க பிளான் கேட்டு வந்த அப்பாவி பொது ஜனம் 500 ரூபாய் நோட்டு கட்டை நீட்ட அருகில் இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக நாகராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர் குற்றவாளி நாகராஜ் 500 ரூபாய் நோட்டுக்கட்டில் ரசாயனம் தடவியது கைரேகை பதிவானது கண்டு அழுது துடித்தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நாகராஜை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் . சற்று நேரத்தில் மாநகராட்சி அலுவலகமே பரபரப்பு தொற்றிக் கொண்டது..