ஸ்மார்ட் மீட்டருக்கு மாதந்திர வாடகை வசூலிக்கப்படாது-அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

சென்னை : ”வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது,” என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டையில், 20 கோடி ரூபாய் செலவில், 140 இடங்களில் நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர், மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.பின், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து சென்னையில், 294 கோடி ரூபாய் செலவில், 2,025 நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப் பட்டுள்ளன. வரும் மழை காலங்களில், மின் வினியோகம் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காக, 1,681 ‘பில்லர் பாக்ஸ்’களின் உயரம், தரையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குறுதியான, மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு நிச்சயம் விரைந்து நிறைவேற்றப்படும். வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.