அடுத்த ஆண்டில் இந்தியா நம்பர்.1 இடத்திற்கு வருவது உறுதி : ஐ.நா சபை சொன்ன அதிர்ச்சி தகவல் ..!!

ஜெனிவா, ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள் தொகை குறித்த சமீபத்திய கணிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் அதிகரிக்க கூடும் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.

மேலும், இது இன்னும் 60 வருடங்களில் சுமார் 10.4 பில்லியன் அளவிற்கு உயரக்கூடும் என்றும், 2100 ஆம் ஆண்டு வரை அதே நிலையில் இருக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது. மக்கள் தொகை பெருக்கம் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஐ.நா அளித்துள்ள அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.