கலக்கும் வாட்ஸ் அப்!! வாடிக்கையாளர்களே புதிய அப்டேட் இதோ…

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்ஆப் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது.

அந்த வகையில் வாய்ஸ் காலிங் போது திரையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.WABetalnfo வெளியிட்ட தகவலின்படி வாய்ஸ் கால் பேசுகையில் கிரே கலரில் பாக்ஸ் திரையில் தோன்றும் வெளியே இருக்கும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் ஸ்பீக்கர் மோட் மாற்றுவது, மற்றும் வீடியோ காலுக்கு செல்வது, ஆடியோ மியூட் செய்வது, போன்காலை கட் செய்வது ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

நாம் ஒருவரிடம் ஆடியோ கால் பேசும்போது கிரே பாக்சில் நாம் பேசும் நபரின் பெயரும் எத்தனை மணி நேரம் பேசுகிறோம் என்கிற டைமரும் ஓடுகிறது. அதற்கு கீழே பெரிய வட்டத்திற்குள் அந்நபரின் ப்ரொஃபைல் பிக்சர் தோன்றும். இறுதியில் ஆடியோ மியூட் பட்டன் அமைந்துள்ளது. இதை பாக்ஸ் வெளியே உள்ள மியூட் பட்டனாக நினைத்துவிட வேண்டாம். பாக்ஸ் இருக்கு உள்ளிருக்கும் மியூட் மூலம் அழைப்பைத் துண்டிக்காமல் நம்மிடம் பேசுபவர்களை மியூட் செய்ய முடியும். மேலும் பாக்ஸ் வெளியே உள்ள மியூட் பட்டன் மூலம் நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காத வகையில் மியூட் செய்ய முடியும்.

இந்த புதிய வசதி வாட்ஸ்அப் பிக்சர் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. சோதனை முயற்சிக்காக ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் பீட்டா வெர்ஷன்2.22.54 டவுன்லோட் செய்து இருக்க வேண்டும். சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இந்த வசதி அனைவருக்கும் வெளியாகும் என அறிவித்துள்ளது.