கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் தனது
சித்தி வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சிறுமி வீட்டில் படுத்து தூங்கினார். வீட்டின் கதவில்
உள்ள தாழ்பால் வேலை செய்யாததால் கதவை பூட்டாமல் படுத்து தூங்கினர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் (வயது 27)
என்பவர் கதவை திறந்து சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்தார்.
அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த சிறுமியின் ஆடைகளை அகற்றி அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். தூக்கத்தில் எழுந்த சிறுமி அதிர்ச்சியடைந்து சத்தம்
போட்டார். இதனையடுத்த பாலன் வீட்டிற்குள் இருட்டில் பதுங்கி கொண்டார்.
சிறுமியின் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது சித்தி சிறுமியின் ஆடைகள்
இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வீடு முழுவதும் யாராவது உள்ளனரா என தேடினர். அப்போது
வீட்டிற்குள் பாலன் நிர்வாணமாக நிற்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து
அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் விரைந்து
சென்று பாலனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பேரூர் அனைத்து மகளிர்
போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பாலனிடம் விசாரணை நடத்ததினர்.
விசாரணையில் அவர் கூறியதாவது:-
எனக்கு சிறுமியை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததும். எனவே அவரை
பாலியல் பலாத்காரம் செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றேன். அயர்ந்து
தூங்கி கொண்டு இருந்த அவரது ஆடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றேன். அதற்குள் சிறுமி எழுந்து சத்தம் போட்டதால் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாலன் மீது
போக்சோ சட்டத்தின் கீழ் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply