மேட்டுப்பாளையம் நியாய விலை கடைகளில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை டோக்கன் வழங்கும் வீடியோ.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நகராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில்
இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டது..

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு மற்றும் மகளிர் நியாய விலை கடைகளில் காலை முதலே பெரும் ஆர்வத்துடன் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு டோக்கன்களை ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர். மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மகளிர் கடை மற்றும் நியாய விலை கடை ஆகியவற்றில் 12 மணி நிலவரப்படி 18,974 டோக்கன்கள் கடை பணியாளர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது..