50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்:188 புதிய ஆம்புலன்ஸ்- முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.!!

188 புதிய அவசரகால ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின்  இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ரூ.69.18 கோடியில் 188 புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,188 புதிய அவசரகால ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்.இதனையடுத்து,செங்கல்பட்டு சித்தாலப்பாக்கதில் மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.

இதனைத்தொடர்ந்து,மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகமும் முதல்வர் வழங்க உள்ளார்