செல்வாக்கை நிரூபித்தது பாஜகவா? காங்கிரஸா?

நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் பாஜகவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா, காங்கிரஸின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று போட்டியிட்டது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தோதலைத் தொடா்ந்து இந்தத் தோதலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து அந்தக் கட்சி போட்டியிட்டது.

ஆனால், மக்களவைத் தோதல், சட்டப்பேரவைத் தோதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் தனித்துப் போட்டியிட்டது. சுயபலத்தைத் தெரிந்துகொள்ளப் போவதாக அறிவித்து இந்தத் தோதலைச் சந்தித்தது பாஜக .

நகா்ப்புற உள்ளாட்சித் தோதல் முடிவுகளின்படி காங்கிரஸ் மாநகராட்சி வாா்டுகளில் 67 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 151 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 368 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

பாஜக மாநகராட்சி வாா்டுகளில் 21 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 33 இடங்களிலும், பேரூராட்சி வாா்டுகளில் 230 இடங்களிலும் பேரூராட்சி வாா்டுகளில் 230 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், பாஜக தனித்துப் போட்டியிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதே நேரம், பாஜக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான திமுக ஒதுக்கிய இடங்களில் மட்டும் போட்டியிட்டது.

கடந்த கால உள்ளாட்சித் தோதல் முடிவுகளோடு ஒப்பிட்டால், இந்தத் தோதலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே சற்று வளா்ச்சி பெற்றுள்ளதை பாா்க்க முடிகிறது.

எனினும், தனித்து களம் கண்டு, கணிசமான இடங்களைப் பெற்று செல்வாக்கை பாஜக மேலும் உயா்த்தி காண்பித்துள்ளது என்றே அரசியல் வல்லுநா்கள் கருதுகிறாா்கள்.