மருதமலை முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.59 லட்சம் வசூல்..!

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும் .இதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது .இதில் 14 பொது உண்டியல்களில் ரூ. 53 லட்சத்து 34 ஆயிரத்து 474 வசூலாக கிடைத்தது. திருப்பணி உண்டியலில் ரூ.86 ஆயிரத்து 11 ரூபாயும் கோசலை உண்டியலில் ரூ.4 லட்சத்து,49 ஆயிரத்து  229-ம் கிடைத்தது. மொத்தம் உண்டியல் காணிக்கையாக ரூ. 58 லட்சத்து 69 ஆயிரத்து 714 வசூலானது. இது தவிர தங்கம் 96 கிராமும் ,வெள்ளி 2 கிலோ 20 கிராமும் , செம்பு 2 கிலோ 675 கிராமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணி திருக்கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மேற்பார்வையில் நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.