இன்னும் மூன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என வடக்கு மண்ட ஐ.ஜி. கண்ணன் பேட்டி அளித்துள்ளார்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட வகையான ஏடிஎம் இயந்திரங்களில் மட்டும் தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர் என்றும் வெளி மாநிலங்களில் இதுபோன்று கொள்ளையை சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் இதுதான் முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார்.
ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களை இந்த கொள்ளை செயலை அரங்கேற்றிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Leave a Reply