மஹா சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி..!

கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலை ஆண்டவர் ஒட்டியுள்ள மலைத் தொடரில், 7-வது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை முதல் 20-ந் தேதி வரை, பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவை மட்டுமின்றி, பிற மாவட் டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு புனித பயணம் செல்ல உள்ளனர்.மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க, வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 200-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சிவராத்திரியன்று 1 லட்சம் பக்தர்கள் மலை ஏற வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே, மலை ஏற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, வனப்பகுதியில் கொண்டு செல்லக்கூடாது என்றனர். பிளாஸ்டிக் தவிர்க்க முன்பண திட்டம் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வனத்திற்குள் வீசுவதை தவிர்ப்பதற்காக, வனத்துறை புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது.

அதாவது, கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக ரூ.20 பெறப்பட்டும். மலைக்கு சென்று விட்டு திரும்பும் பக்தர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை கொடுத்து விட்டு, அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினர்.