பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து.
கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில்,பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply