கோவை மாநகரில் 100 இடங்களில் நூலகம் அமைக்கப்படும்-கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்..!

கோவை: போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த கோவை மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மக்களிடம் போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலும்,
குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், மாநகர போலீஸ்
கமிஷனர் பாலகிருஷ்ணன் முயற்சியில், ‘வீதிதோறும் நூலகம்’ திட்டத்தின்
கீழ், மாநகரில் நூலகங் கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளத்தில் வீதிதோறும்
நூலகம் திட்டத்தின் கீழ் நூலகம் திறக்கப்பட்டது. இதனை போலீஸ் கமிஷனர்
பாலகிருஷ்ணன் திறந்து வைத்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த குழந்தைகளை நல்வழிப்படுத்தும் புத்தகங்கள், குழந்தைகளுக்கான கதைகள்,
பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூக விரோதிகளிடம் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வீதிதோறும் நூலகம் திட்டத்தை தொடங்கி வைத் துள்ளோம். சிறியவர்கள், பெரியவர்கள் படிக்கும் வகையில் புத்தகங்கள் தேர்வு
செய்யப்பட்டு, இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மாநகரப் பகுதிகளில்
100 இடங்களை தேர்வு செய்து வீதிதோறும் நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதுமட்டுமின்றி, பிரத்யேக குழுக்கள் அமைத்து குடியிருப்புவாசிகளிடம்
போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் சிலம்பரசன் மற்றும் உதவி கமிஷனர்கள்,
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.