நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்… வா! ஒன்றிணைந்து செயல்படுவோம்… இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் அழைப்பு ..!

இதற்கு முன் அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அவர் பேசுகையில், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அவற்றை மனதில் இருந்து அப்புறப்டுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. இரட்டை தலைமை, ஒற்றை தலைமை பிரச்சனைகளை கடந்து, கூட்டு தலைமையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். சசிகலாவும், டிடிவி தினகரனும் அதிமுகவில் இணைய வேண்டும்

இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுகவை வெல்ல முடியாது.

அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து சிறப்பாக செயலாற்றினோம் என தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஒன்றிணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.