வாசித்தலை சுவாசித்தலாக்க சிறைத்துறை டிஐஜி வேண்டுகோள்..!

கோவை சௌரிபாளையம் கம்பன் கலைக்கூட 5-ம் ஆண்டு விழா, காந்தி ஜெயந்தி விழா, ஒற்றையடி பாதை கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சண்முகப்பிரியா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கம்பன் கலைக்கூட செயலாளர் சந்திர பிரியா வரவேற்றார். துணைத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்த விழாவில் , கோவை சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மருத்துவர் சுப்பிரமணியம் எழுதிய ஒற்றையடி பாதை எனும் கவிதை நூலினை வெளியிட விஜயா பதிப்பக வேலாயுதம் , புலவர் மாரப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து டி.ஐ.ஜி. பேசுகையில்,
தமிழ் இலக்கியங்களே, உலகுக்கு வழிகாட்டியாக உள்ளது. நமது முன்னோர்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து, அனைத்தையும் வடித்துக் கொடுத்து உள்ளனர். அதனை உணர்ந்து படித்தலையே, நமது சுவாசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். விஜயகுமார் நூல் மதிப்புரை வழங்கினார். தமிழ் அறிஞர்கள் டாக்டர் பன்னீர்செல்வம், முனைவர் கலையமுதன், சொ.சிவலிங்கம் ,
ரெங்கல வள்ளியப்பன், கவையன் புத்தூர் கணேசன் , கோவை கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நூலாசிரியர் மருத்துவர் சுப்பிரமணியம் ஏற்புரையாற்றினார். கவிஞர் ஆறுமுகம், பேராசிரியை சுமதி, அரிமா சண்முகசுந்தரம், ஆ.வெ. மாணிக்கவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..