நமது நாடு அடைந்த வளர்ச்சியை ராகுல் அறிந்து கொள்ளட்டும்-அண்ணாமலை அறிக்கை..!

சென்னை: அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒரு சுற்றுப்பயணத்தை இன்று முதல் மேற்கொள்ள உள்ளார்.

இந்த சுற்றுப்பயணம் மூலமாவது 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் நமது நாடு அடைந்த வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ளட்டும். ராகுல்காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகள் இந்தியாவில் முடியாது என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து இருந்தாலும் அதை முறியடித்து சுயசார்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது நமதுநாடு. மேலும் நமது நாடு விரைவில் உலகத்தின் விஸ்வகுரு என்ற அந்தஸ்தையும் அடையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.