வால்பாறை சாலையில் ஹாயாக உலா வரும் சிறுத்தைப் புலி – சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் நடமாடுவது வாடிக்கையாகிவிட்டது .

இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே உள்ள புதுத் தோட்டம் பத்து ஏக்கர் பகுதியில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஒரு சிறுத்தைப்புலி அச்சமின்றி சாவகாசமாக நடந்து சென்றுள்ளது.

இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது..