கோவையில் இடதுசாரிகள், விசிக,இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!!

கோவையில் இடதுசாரிகள், விசிக சார்பில் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, லாபம் கொழிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையின்மை, மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்வால் சிறு-குறு தொழில்கள் நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும், பாஜகவை கண்டித்து கோவை கணபதி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதே போன்று கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ், விசிக குரு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இதே போன்று பீளமேடு, சுந்தராபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஐ எம்எல் மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்று ஏராளமானோர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.